Sunday, 2 April 2017

ஸ்தல வரலாறு

மூலவர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் . 
அம்பாள்ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி .
தல விருஷம் அரசமரம்.
தீர்த்தம் அகத்திய தீர்த்தம்.
பழமை காலம் தெரியவில்லை.
ஊர் பொன்னவாராயண் கோட்டை.
தாலுக்கா பட்டுக்கோட்டை.
மாவட்டம் தஞ்சாவூர். 
மாநிலம் தமிழ்நாடு .



திருவிழா :
              மகா சிவராத்திரி , பங்குனி உத்திரம்
தல சிறப்பு :
  அடிநாதம் அரசமர வேரிலிருந்து சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கம்.

திறக்கும் நேரம் :
            காலை 6.00 மணி  முதல் 1.00 மணி மாலை 4.00 மணி இரவு 9.௦௦ மணி   வரை
தல பெருமை :
              அம்மனும் அய்யனும் ஒரே  சந்நிதானத்தில் அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்தலம்

             அமைதியான சுழலில் இயற்கை எழில் கமழும் தென்னைமர காடுகளுக்கு நடுவில் அரசமரதடியில் அமைத்துள்ளது இந்த கோயில். இங்குள்ள அமைதியே அற்புதமான தெய்வீகம் . தென்னையின் தென்றல் தாலாட்டை அரசம் அசைந்து கேட்பது போல்.  இங்குள்ள அரசமர அடிவேருடன் தொடர்புடையது இந்த லிங்கம். தனியாக பிரிக்க முடியாத வேர்களுடனும் , மரத்தோடும் தொடர்புடைய சிவலிங்கம் பெருமான்                 ஸ்ரீ அகத்தீஸ்வரர். அய்யனின் சொரூபம் வேறு எங்கும் காணமுடியாத தோற்றமாக இருக்கும். தெய்வீகத்தை ரசிக்க தெரிந்தவர்களே லிங்கத்தின் அழகை அறியமுடியும்.
             
இத்தலத்தில் உள்ள அம்மன் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அதி சக்தி வாய்ந்த அம்மன். தன்னை நாடிவரும் பக்தர்களின் குறைகளை போக்கும் சக்தி .  நேர் திசையில் இல்லாமல் தென்கிழக்கு திசையில் அமைந்திருப்பது கண் கொள்ள காட்சி. அம்மன் அந்துனை அழகு. தாயரில் கண்கள் மிகவும் விசேஷமானவை. ஒரு கண் அப்பன்         ஸ்ரீ அகத்தீஸ்வரையும் இன்னொரு கண் தன்னை நாடி வரும் பக்தர்களையும் காணும். இதில் இன்னொரு அம்சம்  கோபமுடைய முகமாகவும், சிரித்த முகமாகவும் காட்சி அளிக்கும் இந்த அம்மன் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு.  
         இங்குள்ள முருக பெருமானின் சிலை மிக மிக அழகான தோற்றமுடிய இந்த சிலை பழனி முருகனின் சிலை வடிவிலே இருக்கும். கார்த்திகை , ஷஷ்டி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட தொழில் சிறக்கும்.

              ராகு கேது என தனியே கொண்டுள்ள இந்த கோயிலில் நவகிரகங்கள் இல்லை. நாக தோஷம் , களத்திர தோஷம் , காள சர்ப்ப தோஷம் என ராகு , கேதுக்களால் ஏற்ப்படுகின்ற தோஷங்களை போக்கும் ஸ்தலம். அமாவாசை , பௌர்ணமி நாட்களில் பாம்பு சிவனின் பின்னால் உறைவிடமாக கொள்ளுமாம். ராகு கேது தோஷம் உள்ளவர்கள் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி வழிபடுதல் தோஷம் நீங்கி சுபநிகழ்ச்சிகள் கை கூடும்.   


தல வரலாறு :
       அகத்திய குறுமுனி மிக முக்கிய மருந்து தேவைக்காக தேவையான மூலிகை கிடைக்காமல் யோசித்த நேரம் வேதாரண்யம் வேதபுரீஸ்வர் தோன்றி வேதாரண்யம் அருகில் உள்ள மூலிகை வனத்தில் அந்த மூலிகை கிடைக்கும் என சொல்ல , அகத்தியர் தன் சிஷ்ய கோடி பரிவாரங்களுடன் புறப்பட்டார். செல்லும் போது வழியில் இந்த இடத்தை கடந்த போது அசரரி வாக்கு கேட்க அவ்விடத்தில் அடிவேருடன் தொடர்புடைய லிங்கம் பெருமானை மகிழ்ச்சி அடைத்து லிங்கத்தை எடுத்து பிரத்ஷ்டை செய்து வழிபட்டு சென்றரர். பின் வேதபுரிஸ்வரரை தரிசனம் செய்து மூலிகை மருத்துகளை எடுத்து கொண்டு செல்லும் போது இந்த லிங்கத்தின் அழகை காண மறுபடியும் வந்து தரிசனம் செய்ததாக செப்பேடு கூறுகிறது. அதனால் அய்யன் ஸ்ரீ  ஸ்ரீ அகத்தீஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
       தற்போது :
       நாளடைவில் மறைத்து போன இவ்விடத்தை பொன்னவாராயண் கோட்டை திரு. சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு அம்மன் நேரில் அருள் பாலித்து காட்சியளித்து மறுபடியும் இத்தலம் புத்துயிர் பெற்றுள்ளது நிகழ்கால வரலாறு.  இங்கு தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு தன்னால் இயன்ற பெரும் உதவிகளை அம்மன் ஆருளால் செய்து வருகிறார். அவரில் இறை பணி சிறக்க அம்மன் ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அருள வேண்டும் என்பதே பயனடைந்த மக்களின் வேண்டுதல்.

 சிறப்பம்சம் :
       துஷட்ட சக்தி (பேய்) பிடித்தவர்களை விரட்டும் இடம் , ராகு & கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடை , குழந்தையின்மை,   ஆகியவற்றை போக்கும் ஸ்தலம். கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெறவும் அம்பாளை தரிக்கவும். 
நேர்த்திகடன் :

       தெய்வங்களுக்கு  வஸ்திரம் , மஞ்சள், கற்பூரம், பத்தி , நெய், விளக்கேற்ற எண்ணெய் , சந்தனம்,

இந்த ஆலயத்தை நம்பினோர் வீழ்வதில்லை
தொகுப்பு 
R. பிரவீண் குமார் 

Monday, 20 February 2017

அகத்தியர் :



பதினென் சித்தர்களில் முதல் சித்தராக விளங்குபவர் ஸ்ரீ அகத்திய மாமுனி ஆவார். சிவபெருமான் - பார்வதி அம்மையின் திருமணத்தின் போது வடபால் தாழ்ந்து தென்பால் உயர்ந்தது. அதனால் உலகைச் சமன்படுத்த வேண்டித் தென்திசை பொதிகை மலைக்கு சிவபெருமானால் அனுப்பப்பட்டவர் ஸ்ரீ அகத்திய பெருமானார். திருத்தணிகையம்பரியை (திருத்தணி) அடைந்த எந்தை தணிகேசப் பெருமானை வழிபட்டு செந்தமிழ் புலமையையும், ஐந்து இலக்கணம், கணிதம், சித்த மருத்துவம், முதலியவைகளை பெற்று அவற்றிற்கும் மேலான சிவஞானத்தை எய்தினார்.
ஸ்ரீ சரஸ்வதியின் குருவான (ஸ்ரீ ஹயக்ரீவர் மூர்த்தியிடம் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் உபதேசம் கற்றவர். ஸ்ரீ பராசக்தியின் அனைத்து சக்தி பீடங்களையும் வழிபட்டவர். சிவபெருமான் பார்வதி தேவியின் திருமண கோலங்களை பல்வேறு தலங்களில் தரிசிக்கும் பேறு பெற்றவர்.
ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி திருமண வைபோகம் சிவா பூஜையில் உன்னத நிலையை அடைந்தவரும், காசி ராஜாவின் அருமை புதல்வியுமான லோபமுத்ரா தேவி சிவா பூஜையில (சைவம்) உன்னத நிலையை அடைந்தது போல் சக்தி பூஜையில் (சாக்தம்) பரிப பூரண நிலையை அடைய விரும்பினார். லோபமுத்ரா தேவியின் அயராத பூஜைகளால் பகிழ்வூற்ற சிவபெருமான் அசரரி வாக்காய் மகளே! உன்னுடைய பூஜையால் யாம் மகிழ்வுற்றோம். உமது திருமண வயதில் உமது விருப்பம் நிறைவேறும். உன்னை மணக்கப் போகும் மனாளன் சக்தி உபாசனையில் உன்னத நிலையை பெற்றவன். அவனது நேத்ர தீட்சையால் (கண்) உன்னுடைய சக்தி பூஜை பூரணம் அடையும். அதுவரையில் சிவப பூஜைகளை செய்து வருவாயாக என்று அருளினார். அதன்படி சிவா பூஜைகளை லோபமுத்ராதேவி சிரம்மேற்கொண்டு செய்து வந்தார்.

ஸ்ரீ உலோபமுத்ரா தேவி உரிய திருமண வயதை அடைந்த உடன் காசி ராஜா தன் ஆருயிர் மகளின் திருமணத்தை நிறைவேற்ற ஸ்ரீ உலோபமுத்ரா தேவியின் விருப்பத்தை கேட்க, அதற்கு ஸ்ரீ உலோபமுத்ரா தேவி சக்தி உபாசனையில் உன்னத நிலையை பெற்ற ஒருவரையே மணக்க விரும்புவதாக தெரிவித்தார். காசி ராஜன் தன் மகளின் தெய்வீக் நிலை கண்டு அகமகிழ்ந்து தன்னுடைய குல குருவிடம் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியின் எண்ணத்தைக் கூறினார். குல குரு அதை ஆமோதித்து சக்தி உபாசனையில் உன்னத நிலையை அடைந்தவர் ஸ்ரீ அகத்தியர் ஒருவரே எனக் கூறி அவரது பெருமைகளை காசிராஜனிடம் எடுத்து கூறினார். இதனால் பெரிதும் மகிழ்வுற்ற காசிராஜா தன் குல குருவின் அனுமதியுடன் சகல பரிவாரங்கள் படைசூழ பொதிகை மலைக்குச் சென்றார்.
பொதிகை மலை ஆசிரமத்தில் ஸ்ரீ அகத்திய பெருமானார் பிரம்ம முகூர்த்த பூஜைகளை தன் சீடர்களுடன் நிறைவேற்றிக் கொண்டு இருக்கும்போது சிவபெருமான் சக்தி சமேதராய் எழுந்தருளி அகத்திய மாமுனியே பன்னெடுங்காலமாக எமது திருமண கோலத்தை பல தலங்களில் கண்டு மகிழ்வுற்றாய். இப்போது உன்னுடைய திருமண கோலத்தை நாங்கள் காண விரும்புகிறோம் என அருளினார். பின்னர் ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவி திருமணம் சிவபெருமான், பார்வதி தேவி, காசி ராஜா மற்றும் அனைவரது முன்னிலையில் இனிதே நடந்தேறியது.

தலைச்சங்க அகத்தியர்
முச்சங்கம் பற்றிய வரலாற்றில் தலைச்சங்கப் புலவராக விளங்கியவர்.
அகத்தியம் என்னும் நூலை எழுதியவர். காலத்தால் தொல்காப்பியருக்கு முந்தியவர்.

கம்பர் கருத்து
என்றுமுள தென்றமிழ் இயம்பி இசை கொண்டான் - 47
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் -36
தழற்புரை சுடர்கடவுள் தந்த தமிழ் தந்தான். 41
கடலெல்லாம் உண்டு அவர்கள் பின்னர் உமிழ்க என்றலும் உமிழ்ந்தான் - 37
வாதாபிகன் வன்மைக் காயம் இனிது உண்டு அலகின் ஆரிடர் களைசைந்தான் - 38
விந்தம் எனும் விண் தோய் நாகம் அது நாகம் உற, நாகம் என நின்றான். 39
வடாது திசை மேல்நாள் நீசம் உற, வானின் நெடு மா மலயம் நேரா, ஈசன் நிகர் ஆய், உலகு சீர் பெற இருந்தான். 40
குண்டிகையினில், பொரு இல், காவிரி கொணர்ந்தான். 46
முப்புரம் எரித்த தனி மொய்க் கணையும், நல்கினான். 56

சிறப்புப் பெயர்கள்

  • தமிழ் முனிவர் (தமிழ் இலக்கணம் அருளியதால்)
  • மாதவ முனிவர் (அதிக தவம் செய்ததால்)
  • மாமுனி (பெரிய முனிவர் என்ற பொருளில்)
  • குறுமுனி (குட்டையான உருவமைப்பு)
  • திருமுனி (உயர்வுக்குரியவர்)
  • முதல் சித்தர் (18 சித்தர்களில் முதன்மையானவர்)
  • பொதியில் முனிவன் (பொதிகை மலையில் வாழ்ந்தவர்)
  • அமரமுனிவர் (இன்றுவரை பேசப்படும் முனிவர் என்ற பொருளில்)
  • பொதியவரை முனிவன் (பொதிகைமலை)
  • குடமுனி (குடத்தில் பிறந்தவர்)

அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன.
  • தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தார்கள். இவர்களைக் கண்ட அசுரர்களோ கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியரும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும் பலவாறான கருத்துகள் நிலவுகின்றன. குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பிறவி பெற்ற அகத்தியர், இந்திரன் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
  • அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை (ஆற்றல்களைப்) பெற்றார்.
  • அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
  • கைலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர, அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார். இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணித்தார் அகத்தியர். மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் உயரவில்லை எனக்கூறப்படுகிறது.
  • தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் நூலை இயற்றினார்.
  • இராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் அகத்தியர்
  • சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருக் கொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
  • இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
  • அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
  • வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் வாதாபே ஜீர்ணோ பவ என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
அகத்தியர் எழுதிய நூல்கள்[தொகு]

கல்லணையில் அகத்தியர் சிலை
அகத்தியர் எழுதிய நூலகளின் பட்டியல் தனிக்கட்டுரை: அகத்திய நூல்கள்
அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1.   அகத்தியர் வெண்பா
2.   அகத்தியர் வைத்தியக் கொம்மி
3.   அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4.   அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5.   அகத்தியர் வைத்தியம் 1500
6.   அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7.   அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8.   அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9.   அகத்தியர் வைத்தியம் 4600
10.  அகத்தியர் செந்தூரம் 300
11.  அகத்தியர் மணி 4000
12.  அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13.  அகத்தியர் பஸ்மம் 200
14.  அகத்தியர் நாடி சாஸ்திரம்
15.  அகத்தியர் பக்ஷணி
16.  அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17.  சிவசாலம்
18.  சக்தி சாலம்
19.  சண்முக சாலம்
20.  ஆறெழுத்தந்தாதி
21.  காம வியாபகம்
22.  விதி நூண் மூவகை காண்டம்
23.  அகத்தியர் பூசாவிதி
24.  அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
1.   அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
2.   அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.


அகத்தியர் சில குறிப்புகள்
·         1) அகத்தியர் சென்னைக்கு மிக அருகில் உள்ள பஞ்சேஷ்டி எனும் இடத்தில் ஐந்து மஹா யாகங்கள் செய்ததாகவும் பின்னர் பொதிகை வழியாக சென்று அனந்தசயனம் எனும் கேரளாவில் உள்ள அனந்த பத்மனாப ஸ்வாமி கோவிலில் சமாதியில் அமர்ந்ததாகவும் தெரிகிறது. மேலும் மஹாவிஷ்ணு அனந்த சயனத்தில் இருக்கும்போது பத்மநாபனின் வலது கை சிவலிங்கத்தை தழுவியதாக இருக்கும். ஆனால் சில படங்களில் பத்மனாபனின் கை அகத்தியரின் தலையில் வைத்து ஆசீர்வதிப்பதை போல் காணப்படுகிறது. இந்நிலையில் பார்க்கும் பொழுது திருவனந்தபுரம் அனந்த பத்மநாபஸ்வாமி திருக்கோவில் அகத்தியரின் சமாதி உள்ள இடம் என உறுதியாகக் கூறலாம்.
·         2) அகத்தியரால் இராமபிரானுக்கு வெற்றி கிடைக்கும் பொருட்டு அகத்தியரால் உபதேசிக்கப்பட்டதே "ஆதித்திய ஹிருதயம்" எனும் ஸ்லோகம் ஆகும். இதை பாராயணம் செய்த பிறகே இராமபிரான் இலங்கையை வென்றார் என்பது உண்மை. மேலும் இவ்விடத்தில் அகத்தியர் இராமபிரானுக்கு உபதேசித்தது சிவ கீதை எனும் நூலாகும்.
·         3) திருநெல்வேலி புராணத்தின் படி தமிழ் நாட்டை சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் அகத்தியருக்கு கொடுக்க அகத்தியர் பாண்டியனுக்கு கொடுத்ததாக புராணம் கூறுகிறது.
·         4) அகத்தியருக்கு தாமிரபரணி ஆறு சிவ மூர்த்தியால் கொடுக்கப்பட்டது.
·         5) திருவிளையாடல் புராணத்தின் படி தேவர்களை வருத்திய விருத்ராசுரன் இந்திரனது வஜ்ராயுதத்திற்கு பயந்து கடலில் ஒளிந்து கொள்ள தேவர்கள் அகத்தியரை வேண்ட அகத்தியர் சமுத்திர ஜலத்தை தன் கைகளால் ஏந்தி குடிக்க சமுத்திரத்தில் இருந்த விருத்ராசுரன் வெளிப்பட அவனை இந்திரன் வென்றதாகவும் பின் மீண்டும் கடலை அகத்தியர் விடுவித்ததாகவும் மதுரை திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
·         6) அகத்தியர் பன்னிரண்டு வருடங்கள் நீரில் படுத்து தவம் இருந்ததாக கூறுகிறது உத்ர இராமயணம்
·         7) இராம மூர்த்திக்கு இலங்கையை வெல்லும் நிலையில் திவ்ய பாணங்களைக் கொடுத்து அப்பாணங்களின் வரலாற்றையும் கொடுத்தவர் அகத்தியராவார்.
·         8) சிவ அனுகிரகத்தால்் சிவா பூஜை செய்வதற்காக கமண்டலத்தில் கங்கையைப் பெற்றுக்கொண்டு திரும்பி வருகையில் மாயாமபுரத்தின் அருகில் மலை உருவாக இருந்த க்ரௌஞ்சன் மாயையில் பட்டு அதனிடம் இருந்து எழுந்து அவனை மலை உருவாகவே இருக்க சாபம் அளித்து பின் குமாரக் கடவுளாகிய முருகனின் வேலால் பிளவுபட சாபவிமோசனம் செய்து காசி ஸ்தலத்தை அடைந்தவர் அகத்தியர்.
·         9) கந்த மூர்த்தியை எண்ணி தவம் புரிந்து சகல கலைகளையும் பெற்றவர்.
·         10) சுரியனிடமிருந்து தமிழைக் கற்றவர் அகத்தியர்.
·         11) சுவேரனின் குமாரியாகிய காவிரியை மணந்தவர்.(இவளே உலோபமுத்ரா  என காவிரி புராணம் கூறும். இவளை விதர்வ நாட்டு புத்திரி என பாரதம் கூறும்.
·         12) அகத்தியர் வண்டு உரு கொண்டு புஷ்பங்களில் இருந்து தேனை எடுத்து சிவ பூஜை செய்ததால் ஈங்கோய் மலை எனும் ஸ்தலம் உண்டாயிற்று ( திருசெங்கோட்டு புராணம் ).
·         13) விஷங்களுக்கு என்று அகத்தியரால் ரிக் வேதத்தில் ஒரு கீதம் செய்யப்பட்டு இருக்கிறது.
·         14) தூங்கி எயில் எழுந்து தொடித்தோல் செம்பியன் எனும் மன்னன் காலத்தில் அவன் ஆண்ட காவிரி பூம்பட்டிணத்தில் அகத்தியர் இந்திர விழாவை எடுத்திட்டார் என மணிமேகலை கூறுகிறது.
·         15) அகத்தியரின் மாணவர்கள் தொல்காப்பிய முனிவர் அதன் பொருட்டு ஆசான் தூராலிங்கன் செம்பூட்சேய், வையாபிகன், வாய்த்தியன், பணம்பாரன், கழாரம்பன், அவிநயன், காக்கைப் பாடினியன், நற்றத்தன், வாமனன்.
·         16) அகத்தியருக்கு கும்பமுனி, குருமுனி, கலசயோனி என பல நாமங்கள் உண்டு.
·         17) அகத்தியர் எனும் பெயருக்கு பொருள் விந்திய மலையை அடக்கியவர் என்பதாகும்.